எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் – ரஜினிகாந்த்

0
26

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல.

எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. படங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.

“2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.

நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.