எதிர்கட்சிகளை குறை சொல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்! – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அறிவுறுத்து

0
15
கோலாலம்பூர், செப். 10-முஸ்லிம் அல்லாதோரின் தயாரிப்பு பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் தொடர்பில் எதிர்கட்சிகளை குறை சொல்லாமல்
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவுறுத்தினார்.
இந்த பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சார விவகாரத்திற்கு அம்னோ-பாஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்குவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடியிடம் இது குறித்து கேட்ட போது அவர் அதற்கு ஆதரவளிக்க வில்லை என்று கூறினார்.
அதே போன்று பாஸ் தலைமைத்துவத்திடமும் இது குறித்து கேள்வி எழுப்ப பட்டது. இந்த பிரச்சாரத்திற்கு அவர்களுக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆனால் மலாய்க்காரர்களின் பொருட்களை வாங்குவதற்கும் இளம் தொழில் முனைவர்களை ஊக்குவிக்கவும் அம்னோ-பாஸ் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
நிதி அமைச்சராக செயலாற்றும் குவான் எங் இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு, பூமிபுத்ரா அந்தஸ்துடையவர்களின் பொருட்களின் விற்பனைகளை மேம்படுத்த வழி செய்யலாம். அதை விடுத்து தேவையற்றதை பேச வேண்டாம் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இதனிடையே  இந்த விவகாரம் தொடர்பாக தாம் விமர்சித்ததை புரிந்து கொள்ளாமல் குவான் எங் மசீசாவை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை என்று அதன் தலைவர் வீ கா சியோங் சாடினார்.
குவான் எங்கிற்கு மலாய் புரிய வில்லை என்றால் அவர் மீண்டும் பள்ளிக்கு போக வேண்டும். அவரின் பேச்சுகள் சிறுப்பிள்ளைத் தனமாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
அம்னோவுக்கும் இந்த பிரச்சாரத்திற்கும் தொடர்பில்லை என்று சுட்டிக் காட்டிய அவர் லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோராலே இது சர்ச்சையாகிறது என்று சாடினார்.
-sarawedi.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.