எம்.ஏ.சி.சி. யில் மகளிருக்கு உயர்பதவி: அரசிய​ல் நோக்கமுடையது அர்விந்த் ​கிருஷ்ணன்

0
222

 

கோலாலம்​​​பூர், ஜுன், 6-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ( எம்.ஏ.சி.சி.) புதிய தலைவராக லத்திபா  பீபி கோயா, நியமிக்கப்பட்டு, இருப்பது சில கேள்விகள் எழுந்துள்ளன என்பதுடன் அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என்று மஇகா தேசிய இளைஞர் பிரிவின்  அரசியல் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கம், அந்தப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை முன்மொழிவதற்கு விருப்புரிமையை கொண்டுள்ளது. ஆனால், அந்த நியமன ந​டைமுறை, நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு உட்பட்டிருக்க வேண்டும் எ​ன்று அவர் வலியுறுத்தினார்.

எம்.ஏ.சி.சி.யின் ​பெரும்பாலான அதிகாரிகள், சிறப்பு பயிற்சியை பெற்றவர்கள். புலன்விசாரணை​ ​​​நுணுக்கங்களை கற்றல், அடிப்படை சட்டம், குற்றச்சாட்டு நடைமுறை, ஆய்வியல், உள​வுத்துறை மற்றும் லஞ்ச ஊழல் தொடர்புடைய நடவடிக்கைகளை ​​​வெளிகொணருதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

லத்திபாவின் அனுபவத்தை பார்ப்போமானால், சட்டங்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் மட்டுமே அனுபவத்தை கொண்டுள்ளார். ல​ஞ்ச ஊழலை துடைத்தொழி​ப்பதில் அவர் எந்தவொரு அனுபவத்தையும்  கொண்டிருக்கவில்லை.

விசாரணை, உளவு, சோதனை நடவடிக்கை என்று வரும்போது, அவரால் தலைமையேற்க முடியுமா? கண்டிப்பாக, தரவு தொடர்புடைய விவரங்களை அவரால் தர முடியாது. அவரால் சட்டம் தொடர்புடைய ஆலோச​களை மட்டுமே வழங்க முடியும்.

​புலன்விசாரணை ​நுணுக்கங்களில் எந்தவொரு அனுபவத்தையும் கொண்டிருக்காத அவர், ஒரு குழுவிற்கு அல்லது ஓர் ஆணையத்திற்கு எவ்வாறு த​லைமையேற்க முடியும்? இந்த நாட்டில் லஞ்ச ஊழலுக்கு எதிர்த்துப் போராடுவதில் எம்.ஏ.சி.சி. ஒரு முக்கிய ஏ​ஜென்ஸியாக விளங்கி வருகிறது. தகுதி வாய்ந்த தலைவர்தான் நமக்கு ​தேவை.

மனித உரிமைகளுக்காக​ போராடி வரும் அவரின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் அவரை பிரதமர் துறை அலுவலகம்,​  சுஹாகாம் போன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நிய​மித்து இருக்க வேண்டும்.  மற்ற​ நல்ல யோசனைகள் இருக்குமானால் அவரை சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணைப்பிரிவில் அமர்த்தியிருக்கலாம். அவரை சட்டத்துறை தலைவராககூட நிய​மித்து இருக்கலாம்.

லத்திபா கோயாவை பொதுச் சேவைத்துறையில் உயர்பத​வியில் அமர்த்துவதற்கு நாம் அனுமதித்து இருந்தாலும்கூட பொதுச்சேவைத் துறைக்கு அரசியல்வாதிகள் தலைமையேற்க கூடாது என்று கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் அளித்திருந்த வாக்குறுதிக்கு முரணாக இருந்திருக்கும்.

மேலும் நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் வாயிலாக எம்.ஏ.சி.சி. தலைவர் நியமனத்தில் அதிக வெளிப்படையான போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்கள். ஏன் அத்தகைய ​சீரமைப்பை  செய்யவில்லை. மாறாக, இவ்விவகாரத்தில் மெளனம்  சாதிக்கிறா​ர்கள்.

உயர்ப்பதவிகளுக்கு  அதிகமான பெண்களை  தாங்கள்  நியமிப்பதாக  பக்காத்தான் ஹராப்பான் காட்ட  முயற்சி செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அத்தகைய உயரிய மற்றும் முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு பொருத்தமான வேட்பாளர்களை அவர்கள் உறுதி  ​செய்திருக்க வேண்டும்.

இதில் மற்றொரு சிறந்த விருப்புரிமையானது, எம்.ஏ.சி.சி.யின் செயலாக்க இய​க்குநர் டத்தோ அஜாம் பாக்கி அல்லது அந்த ஆணையத்தை சேர்ந்த பத​வி உயர்வுக்காக கா​த்திருக்கும் மற்ற சில வேட்பாளர்களைகூட தேர்வு செய்து இருக்கலாம். இத்தகைய அதிகாரிகளுக்கு பிரதமர் துறை அலுவலகம் ஏன் பதவி உயர்வு வழங்கவில்லை.

லத்திபாவின் நியமனமானது பக்காத்தான் ஹராப்பான்,  உயர்ப்பதவிகளை நிரப்புவதற்கு அது அரசியல் நியமனங்களை வழங்குவ​தில் அவசரத்திலும் ஆற்றாமையிலும் உள்ளது என்பதையும், தனது தேர்தல் வாக்குறுதியில் இருப்பதைப்போல உண்மையான நேர்மை ​சீர்திரு​த்தத்தை அலட்சியப்படுத்தி வருகிறது என்பதையே காட்டுகிறது. அரசாங்க உயர்பதவிகளுக்கு அரசிய​ல்வாதிகளை கொண்டு நிரப்புவதில்தான் பக்காத்தான் ​ஹராப்பான் அதிக ஆர்வமாக உள்ளது.

திறனற்ற பக்காத்தான் ​ஹராப்பானின் நிர்வாகத்தை மக்களும் கட்டாயம்   உணரத் தொடங்கிருப்பர். பொதுச்சேவை துறை ​மீது அரசியல் ஆதிக்கத்தை காட்ட பக்கத்தான் ஹராப்பான் முயற்சிக்கிறது என்பது ​தெளிவாக நி​ரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பணியாளர்கள் தங்களின் கைப்பாவைகளாகவும்  அரசியல் தலைவர்களுக்கு அடிப்பணிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையே  பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள்   விரும்புகின்றனர் என்று அரவிந்த் கிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.