எஸ்யூபிபி, யூபிபி இடையே நிலவும் பிரச்னை தீர்க்கப்படவேண்டும்

0
198

எஸ்யூபிபி எனப்படும் பார்ட்டி ராக்யாட் பெர்சத்து சரவாக் மற்றும் யூபிபி எனப்படும் பார்ட்டி ராக்யாட் பெர்சத்து கட்சிகளுக்கிடையே நிலவி வரும் பிணக்கத்தை, 14ஆவது பொது தேர்தலுக்கு முன்பதாகவே தீர்வுக்காண வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்
தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில், இந்தப் பிரச்னைக்கு சுமூகமான நடவடிக்கையை எடுக்குமாறு தாம் சரவாக் முதலமைச்சர் டத்தோ பத்திங்கி அபாங் ஜோஹாரி துன் ஓப்பேங் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இரு கட்சிகளும் இணைந்து ஒரு வலுவான கட்சியாக செயல்படும் என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார். எஸ்யூபிபியின் 24ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தப் பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here