ஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது!- சிவகுமார்

0
51

ஈப்போ: நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய ஜசெக துணைத் தலைமைச் செயலாளர், வி. சிவகுமார், அவற்றை சரிப்படுத்தும் வகையில் இந்தியர்களின் ஆதரவை மீண்டும் பெற, நம்பிக்கைக் கூட்டணி தங்களின் செயல்முறைகளை திட்டமிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கேமரன் மலைத் தொடங்கி, செமினி, தற்போது ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இதற்குக் காரணமாக அமையும், விவகாரங்களில் நம்பிக்கைக் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான இந்தியர்கள் இன்னும் நம்பிகைக் கூட்டணியை ஆதரித்து வந்தாலும், தற்போது சிலர் அவர்களின் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ளது தெரிய வருகிறது என அவர் தெரிவித்தார். இந்தியர்கள் நம்பிக்கைக் கூட்டனியின் மீது பெருத்த நம்பிக்கைக் வைத்திருந்தனர்,என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார், நம்பிக்கைக் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்நிலையை மீண்டும் சரி செய்ய இயலும் எனக் குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில், இந்தியர்களின் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here