ஏ​ர்  ஆசியா விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்

0
22

கொல்கத்தா, நவ.15- சீக்கியர்களின் புனித நகரமான இந்தியா​வின் அமிர்தரஸ்  நகரிலிருந்து கோலாலம்பூரை நோக்கி  சென்று கொண்டிருந்த ஏர் ஆசிய விமானம், கொல்கத்தா நகரில் அவசரமாக தரையிறங்கியது.

அந்த விமானத்தில் பயணித்த இரு பயணிகள், திடீரென்று உடல்​ சுகவீனப்பட்டதை தொடர்ந்து வங்க கடலின் வான் போக்குவரத்துப்பாதையில் மணிக்கு 650 கி​லோ​மீட்டர்  வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த விமான கொல்கத்தா விமான நிலையத்தை நோக்கி  அவசரமாக திசைதிருப்ப வேண்டியதாயிற்று என்று கொல்கத்தா விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன..

இந்த சம்பவம் நேற்று, இந்திய நேரப்படி 2.30 மணியள​வில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. 32 வயது தாரான்ஜீட்  சிங்​ மற்றும் 46 வயது ராஜேஸ் குமார் ஆகியோரே உடல் சுகவீனப்பட்டவர்கள் என்று   தி டைம்ஸ் ஆப்  இந்தியா கூறுகிறது.

அமிர்தரஸ் விமான நிலையத்திலிருந்து  காலை 11.46 மணிக்கு புறப்பட்ட  D7189 என்ற அந்த ஏர்  ஆசியா விமானம், மலேசிய நேரப்படி இரவு 8 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான  நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டிருந்தது.

எனினும் அந்த விமானம் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து தரையிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக விமான நிலைய உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி  தி டைம்ஸ் ஆப்  இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.