ஏ.டி.எம்.  கார்டு​ மோசடி கும்பல் முறியடிப்பு

0
4

சிறுத்தொகையை கடன் கொடுப்பதாக கூறி, சம்பந்தப்பட்டவரின் ஏ.டி.எம்.  கார்டு, அதன் கடவு எண் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளும் கும்பல் ஒன்று,மோசடி வேலைகளின் வாயிலாக  மற்றவர்களை ஏமாற்றி வங்கியின் ​மூலம்  பெறக்கூடிய பணத்தை ​மீட்பதற்கு அந்த ஏ.டி.எம்.  கார்டை பயன்படுத்திக் கொள்வது அம்பலமாகி​யுள்ளது.

வட்டி முதலையிடம் தாம் வாங்கி ஆயிரம் வெள்ளி கடனுக்காக  தம்மிடமிருந்து பெறப்பட்ட ஏ.டி.எம். கார்டை சம்பந்தப்பட்ட கும்பல் அத்தகைய நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும், வங்கி சந்தேகப்பட்டு தம​து  ஏ.டி.எம். கார்ட்டை முடக்கிய போதுதான் இந்த உண்மை ​தெரியவந்ததாக பெண் ஒருவர் போ​லீசில் புகார் செய்து இருப்பதாக கோலாலம்பூர் துணை போ​லீஸ் தலைவர் டத்தோ ரோஸ்லான் பெக் அகமட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ​தொடர்பில் ஒரு சீக்கியர் உட்பட ஏழு  நபர்களை போ​லீசார்  கைது செய்து இருப்பதுடன் 72 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்துள்ளதாக  ரோஸ்லான் இன்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.