ஐஎஸ்: 3 முக்கியக் கோயில்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது!- கோயில் நிருவாகம்

0
38

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பத்துமலை கோயில் நிருவாகம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், நான்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. பத்து மலை திருத்தலம், கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் மற்றும் எச்எஸ் லீ சாலையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலையங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் மரணமுற்ற முகமட் அடிப்பை காரணமாக காட்டி இத்தீவிரவாதிகள் மலேசியாவில் உள்ள ஆலையங்கள் மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள இருந்ததை குறிப்பிட்டுக் கூறிய கோயில் நிருவாகம், இம்மாதிரியான அச்சுறுத்தல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

மூன்று கோவில்களிலும் தற்போது மூன்று பாதுகாப்புப் படையினர் உள்ளனர். கோயிலுக்கு வருபவர்களின் பைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என கோயில் நிருவாகம் குறிப்பிட்டுள்ளது.

selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here