ஒய்.ஜி.பி ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவு; அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி

0
19

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார்.  அவருக்கு வயது 93.

 கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலம் பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்ற அவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  கடந்த 1958ம் ஆண்டு சென்னையில், ‘பத்ம சேஷாத்ரி பாலா பவன்’ என்ற பெயரில் பள்ளி கூடமொன்றை துவக்கி, கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.  சிறந்த கல்வியாளராக செயல்பட்ட இவரது சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி இவரை கவுரவித்தது.
அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.