ஒற்றுமையைச் சீர்குலைக்கும் கபடதாரிகளை அனுமதிக்காதீர்கள்! கூட்டரசுப்பிரதேச ம இகா மாநாட்டில்  தேசியத்தலைவர் வேண்டுகோள்!

0
17

கோலாலம்பூர், ஜூலை, 14-   ம இ கா வில் இன்னும் துரோகிகள் இருக்கிறார்கள் அவர்களை களையெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, இருப்பினும் அதையும் மீறி கட்சியை ஒன்றுபடுத்த வேண்டிய பொறுப்பு உண்மைத்தொண்டர்களுக்கு இருக்கிறதென்று ம இ கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.      இன்று கோலாலம்பூரிலுள்ள  முக்கிய உணவு விடுதியில் நடைபெற்ற கூட்டரசுப்பிரதேச ம இ கா வின் 72-73 ஆம் ஆண்டுக்கான  பே   ராளர் மாநாட்டைத் துவக்கி வைத்துப்பேசும் போது, அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டார்.

எனது தலைமையில் இயங்கும் மஇகாவில் எந்த பிரிவினையும் பேதமும் கிடையாது, அனைவரும் ஒன்றே குலமென்றும் ஒருவனே தெய்வமென்றும் இணைந்து செயல்பட வேண்டும், கட்சியில் உழைப்பவர்களுக்கு அவர்களே. அதற்கான இடத்தைத் தேடிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஜனநாயக வலிமை கட்சிக்குள் இருக்கிறது. அதை உழைப்பின் மூலம்தான் பெற முடியுமேயொழிய வெறும் மெழுகுப் பொம்மை போல காட்சியளித்து பதவியைப் பெற முடியாதென்ற உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று நாடாளுமன்றமேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ

விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.       ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டில் 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்தக் கட்சித் தலைவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ம இ கா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்ட பல ம இ கா முன்னணித் தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில்  மாநிலத்தலைவர் டத்தோ ராஜா சைமன் முன்னதாக த​லைமை உரையா​ற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here