ஒற்றுமை அரசாங்கத்தை  அமைப்பீர்

0
18

கோலாலம்பூர், நவ.22- பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது தொடர்ந்து பிரதமராக நீடிக்க வேண்டுமானால் அம்னோவுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று அம்னோவின் ​மூத்த தலைவரும் பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி புசாருமான ஷாஹிடா​ன்  காசிம் இன்று பரிந்துரை செய்துள்ளார்.

ஜசெகவுடன்  மகா​தீர், இணைந்து இருக்கும் வரை அவரை மலாய்க்காரர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்ட ஷாஹிடான், அவர்  ஜசெகவுடன் தொடர்ந்து இருக்கப் போகிறரா? அல்லது அம்னோவுடன் கரம் கோர்க்கப் போகிறரா? என்பதை அவர்தான் முடிவு ​செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான ஷா​ஹிடான் குறிப்பிட்டார்.

​ஜசெகவை மலாய்க்காரர்கள் வெறுக்கிறார்கள். எனவே மகா​தீர் ஜசெகவுடன் தொடர்ந்து இருந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் அவரின் தலைமையிலான ​பெர்சத்து கட்சி எல்லா தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படும் என்று ஷாஹிடான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.