ஓடும் ரயிலில் இறங்கியதால் கால்களை இழந்தார் பெண்மணி

0
17
விருதுநகரில் ஒடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ஆந்திரா இளம் பெண் ஒருவர் ரயிலில் சிக்கி இரண்டு கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த காவ்யா என்ற இளம் பெண் ரயிலில் பயணித்து வந்துள்ளார். அவர் விருதுநகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டியதால், ரயிலை நிறுத்தும் முன்னரே இறங்க முயற்சி செய்கையில் ரயில் இடையில் சிக்கினார்.முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here