கதைகளைத் தேர்வு செய்வது எப்படி?- விஜய் சேதுபதி விளக்கம்

0
216

கதைகளை எப்படி தேர்வு செய்து நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்தி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை 7சி எண்டர்டையின்மன்ட் மற்றும் அம்மா நாராயணா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ‘எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி அளித்த பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”மக்களை பலரும் பல வகையில் சாகடிக்கிறார்கள். நாம் திரையரங்கிற்கு அழைத்து வந்து மக்களை சாகடிக்கக் கூடாது என்று நினைத்தே கதைகளைத் தேர்வு செய்கிறேன். ஒரு இயக்குநர் கதை சொல்ல வரும் போதே அவர் எப்படிப்பட்டவர், அவரது குணம் எப்படி என்று தெரிந்துகொள்வேன். ஏனென்றால் அவருடன்தான் பல மாதங்கள் படத்துக்காக பயணிக்க வேண்டியது வரும்.

இயக்குநர் குணாதிசயங்கள் பிடிக்கவில்லையென்றால் அவரோடு பயணிப்பது கடினம். நல்ல நண்பர்கள் என்றாலும் கதை சரியில்லை, வேறு கதையிருந்தால் சொல்லுங்கள் என்றால் நேரடியாகச் சொல்லிவிடுவேன். நட்புக்காக கதைகள் தேர்வு செய்து, எந்தவொரு தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது. இத்தனை படங்கள் நடித்த அனுபவமும், ஓரளவுக்கு நல்ல கதைகள் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

எப்போதுமே என் படத்தைப் பார்க்கும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பது என் எண்ணம். நமக்கான நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படியோ, அப்படித்தான் கதைகள் அமைவதும். சினிமா என்பது மக்களுக்கானது” என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.