கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வருடன் தலைமைச் செயலர் சந்திப்பு

0
126

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இதையடுத்து சற்றுமுன்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த செய்தியும் தொண்டர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து. மாலை 5 மணியளவில் காவிரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகும் என கூறப்படுவதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.