கர்நாடக சட்டசபையில் கடும் அமளி: சட்டப்பேரவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்

0
23
 

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

இதனால் பாஜகவினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் பேரவையில் ஏற்பட்ட கடும் அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.