கர்நாடக தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் ராகுல் சுற்றுப்பயணம்: திருநாவுக்கரசர் தகவல்

0
189

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள் ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது: ‘‘ராகுல் காந்தியை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நடப்பு அரசியல் சூழல், கட்சி வளர்ச்சிக்காக நான் மேற்கொண்ட முயற்சிகள், திட்டங்களை எடுத்துக் கூறினேன்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தேன். அதை ஏற்றுக்கொண்ட ராகுல், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் வருவதாக உறுதி அளித் தார்’’ என்றார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மாநில செயற்குழு, மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர் கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இந்தச் சூழ் நிலையில் ராகுல் காந்தியை திருநாவுக்கரசர் சந்தித்திருப் பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here