கலப்பு இரட்டையர் வெற்றி

0
258

நாட்டின் முன்னணி கலப்பு இரட்டையர் சான் பெங் சூன் – கோ லியூ யிங் 2018ஆம் ஆண்டை மிக சிறப்பாக தொடக்கியுள்ளனர். பெங்கோக்கில் நேற்று நடைப்பெற்ற தாய்லாந்து மாஸ்டர் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சான் பெங் சூன் – கோ லியூ யிங் இணை வெற்றி பெற்றது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர்கள், நேற்றை இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் டெச்சால்போல் புவாரானுக்ரோ – புத்தியா சுபாஜிராகூல் இணை 21-15, 14-21, 21-16 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர்.

இப்போட்டியின் பெண்கள் ஒற்றையைர், பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் தாய்லாந்து ஆட்டக்காரர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.