கலாச்சாரத்தை பேணி வளர்பதில் மாணவர்கள் முனைப்பு காட்ட வேண்டும் -கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் சண்முகம்

0
40

சிந்தோக் .ஏப் 14-

கலாச்சாரத்தை பேணி வளர்பதில் இந்திய மாணவர்கள் தீவிர முனைப்பு காட்ட வேண்டுமென கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி கேட்டுக்கொண்டார்.

எத்தனையோ சிரமங்களுக்கிடையே வட மலேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலம்பக் கழகத்தின்வழி சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, கால்பந்துப் போட்டி போன்றவற்றை ஏற்று நடத்துவது போற்றக்கூடிய ஒன்றாகும் என சண்முகம் தெரிவித்தார்.

வட  மலேசிய பல்கலைக்கழகத்தின் செந்தமிழ் விழா விருந்து நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கெடாவில் சுங்கைப்பட்டாணி தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளி வெகுவிரைவில் திறப்பு விழா காண விருப்பதாகவும், அதேவேளையில் கோலாமூடா ஹோம் டிவிசன் தமிழ்ப்பள்ளி பண்டார் புத்ரி ஜெயாவில் கட்டப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

நமது தாய்மொழியான தமிழ் மொழி இந்நாட்டில் என்றும் நிலைத்திருக்க பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சண்முகம் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் அடிப்படை அறநெறிகளை கற்றுக்கொள்வதற்கு தமிழ்ப்பள்ளிகள் முக்கிய காரணமாக விளங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மலேசிய பல்கலைக்கழகம் ஐந்தாவது முறையாக செந்தமிழ் விழாவை நடத்தியிருக்கிறது. அவர்களது இந்த முயற்சி தொடர வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தினார்.

இவ்விழாவிற்கு சண்முகம் 5000 வெள்ளி உதவி நிதியையும் வழங்கினார். இவ்வியக்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் ஆசைத்தம்பி தங்கவேலு ,செந்தமிழ் கலைவிழா 5இன் விருந்தின் மூலம்  திரட்டப்பட்ட தொகை  பல்கலைக்கழகத்தின் ஏழை மாணவர்களின் உதவிக்கு பெரும் பயனாக இருக்கும் என தெரிவித்தார்.

(ANEGUN)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here