கலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்

0
118

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் காலமான பிரபல தொலைக்காட்சி – திரைப்படக் கலைஞரான அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்:

12-A, JALAN PU 3/2A, TAMAN PUCHONG UTAMA,

47140 PUCHONG, SELANGOR

சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன், குறிப்பாக மலாய் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்து மலாய் சமூகத்திலும் நிறைய இரசிகர்களைப் பெற்றிருந்தார்.

63 வயதான அச்சப்பன் சிறுசீரகக் கோளாறினால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

மலாய் மொழியை அவர் உச்சரிக்கும் விதமும், இந்தியர்களைப் போல் நகைச்சுவையாகப் பேசும் விதமும் இரசிகர்களைக் கவர்ந்து அவரை புகழ்பெற்ற – மலேசியா முழுவதும் நன்கு அறியப்பட்ட கலைஞராக உயர்த்தியது.

அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளியேறி வரும் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கடந்த வாரம்தான் அச்சப்பன் கலந்து கொண்டு தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

courtesy: selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here