கள்ளக் காதல்: நண்பர் படுகொலை

0
47
லட்சுமணனின் பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்  சேர்ந்த லட்சுமணன், கடந்த 10 நாட்களாக காணாமல் போயிருந்ததால் அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.  இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்துகையில் லட்சுமணனின் நண்பர் ரங்கநாதன்  லட்சுமணனை கொலை செய்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள முக்குளம் ஏரியில் புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதை தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு லட்சுமணனின் சடலத்தை போலீசார் தோண்டியெடுத்தனர்.
திருமணம் ஆகாமலே  பெண் ஒருவருடன் குடும்பம் நடத்திவரும் ரங்கநாதன்,  தனது வீட்டிற்கு வந்த லட்சுமணனுக்கும் அந்த பெண்ணுக்கும்  கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் கூறினார். பலமுறை லட்சுமணனை கண்டித்தும்  தனது காதலியுடனான கள்ளக்காதலை ஏற்றுகொள்ள முடியாமல் காரில் கடத்தி வந்து கொலை செய்ததாகவும், பின்பு கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, ரங்கநாதனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், செல்வந்தராக வலம்வந்த லட்சுமணனிடம் நகையைப் பறிக்கவே கொலை நடந்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், லட்சுமணன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என பல கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.