கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது

0
49

 

சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத் தொகு

ப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது முதல் தொகுப்பு 2011 ஆண்டு வெளியான `களம் காலம் ஆட்டம்’.

2016-ம் ஆண்டு வெளியான இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு `வால்’. வால் தொகுப்புக்காக 2017-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் `குமர குருபரன்’ விருதைப் பெற்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.