காஜாங் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு 2021ல் நிறைவுறும் – நஜிப்

0
161

காஜாங்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவின் திட்ட வரைவை  இன்று காஜாங் மருத்துவமனையில் தொடக்கி வைத்து பேசிய பிரதமர் டத்தோ சிறீ நஜிப், 2015-ல் காஜாங் மருத்துவமனைக்கு திடீர் வருகை புரிந்த போது மருத்துவமனையின் நிலை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், மருத்துவமனையை புதுப்பிப்பதுடன், விரிவாக்கம் செய்வதும் மிக முக்கியம் என்று உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, 2016 நிதிநிலை அறிக்கையில் இந்த மருத்துவமனையின் விரிவாக்கதிற்காக RM 1.2 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் காஜாங் மற்றும் உலு லங்காட் பகுதி மக்கள் பயன் பெறுவர் என்றும் தெரிவித்தார்.

இந்த வளாகம் காஜாங் மருத்துவமனையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதாகவும், இந்த வளாகத்தில் 272 படுக்கை வசதியும், 14 பிரசவ அறைகளும், 6 அறுவை சிகிச்சை கூடங்களும் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.

வெளி நோயாளிகளுக்கு ஒரு வெள்ளியும், பிரசவத்திற்கு ஐம்பது வெள்ளியும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் 400 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையை 2020ல் மலேசியா அடையும் என்றும் நம்பிக்கை  தெரிவித்தார்.

பாரிசான் நேசனல், காஜாங் மக்களின் நலன்களை மனதில் கொண்டே பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாகவும், தொடர்ந்த வளர்ச்சி பணிகளுக்கு பாரிசான் கட்சியையே மக்கள் தேர்வு செய்யவேண்டும் என்றும் கூறினார்.  – பிரியா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.