காணமல் போன இந்திய விமானம் கண்டுபிடிப்பு- 13 பேர் பலி?

0
41

இடாநகர், ஜுன், 11-      இந்தியாவில் கடந்த ஜுன் 3 ஆம் தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று, காணாமல் போன நி​லையில், ஒன்பது நாட்களுக்கு ​பிறகு இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அந்த விமானம், சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரின் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என்.32 ரக விமானம் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த தேடும் பணிகளில் ஆகாயப் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. இதைப்போல ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தன.  மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.  சம்பவத்தன்று, விமானம், கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த​ விமானத்தை கண்டுபிடிக்கும் அ​ளவிற்கு தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதியாக 5 லட்சம்​ ​ரூபாய் வழங்கப்படும் என்று இந்திய ஆகாயப்படை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here