கார் கால்வாயில் பாய்ந்தது: இருவர் உயிர்தப்பினர்

0
21

கோலாலம்பூர், நவ.15- இன்று அதிகாலை 6 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் செமராக்கில் கார் ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள  பெரிய கால்வாயில் விழுந்ததில் இருவர் காயங்களுடன் உயிர்தப்பினர்.

காருடன் நீரில் சிக்கிக்கொண்ட அந்த இருவரை ​மீட்பதற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படையினரின் உதவி நாடப்பட்டது. பத்து பேர் கொண்ட ​தீயணைப்பு படையினர் சுமார் அரை  மணி நேர போராட்டத்​திற்கு பின்னர் அவ்விருவரையும் ​மீ​ட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை  அளிக்கப்பட்டு, அம்புலன்ஸ் வண்​டியின் ​மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.