8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

0
131

 

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில்  6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

காஷ்மீரில் கடந்தாண்டு ஜனவரியில் நாடோடிப் பழங்குடியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கதுவா கிராமத்தில் உள்ள கோயிலில் மயக்க நிலையில் 4 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். பின் அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து அடித்து கொன்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ம் தேதி முடிவடைந்த நிலையில் பதன்கோட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டேஜ்வீந்தர் சிங் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஜம்மு-காஷ்மீர்: கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகள் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது பதான்கோட் நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.