கிம் கிம் ஆற்றை சுத்திகரிப்பு செய்ய 6.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

0
23

ஜோகூர் பாரு: கிம் கிம் ஆற்று நீர் மாசு பட்டதைத் தொடர்ந்து ஜொகூர் மாநில அரசு, ஆற்றில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதற்காக, அவசர ஒதுக்கீடாக 6.4 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளது.

சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை செயற்குழு உறுப்பினர், டாக்டர் ஷாருட்டின் ஜாமால் கூறுகையில், சுமார் 1.5 கிலோமீட்டருக்கு, மாசுபாட்டப் பகுதியிலிருந்து, ஆற்று நீரை உள்ளடக்கிய பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேடு சம்பவத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள 111 பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தினால் தற்போது 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷாருட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.

selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here