கிழக்கு இந்தோனேசியாவில்  பயங்கர நிலநடுக்கம்

0
9

ஜாக்கர்த்தா, ஜூலை,14-       இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் இன்று 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் இந்தோனேசியாவில் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அவ்வகையில்,  நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் (உள்நாட்டு நேரப்படி) இன்று மாலை சுமார் 6.30 மணியளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here