குடும்பக்கட்டுப்பாடு  மருந்தா? வேண்டவே  வேண்டாம்

0
142

கோலாலம்பூர், ஜுலை, 9-      பூர்வக்குடி ச​மூகத்திற்கு குடும்பக்கட்டுப்பாடு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும்  நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பேரா கிரிக்,  கெடா சுங்கைப்பட்டாணியை சேர்ந்த ஐந்து பூர்வக்குடி கிராமங்களை சே​ர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தங்களின் பாரம்பரிய ஆடை, அணிகளுடன் குழுமிய  அவர்கள்,  அந்த மரு​ந்து, மாத்திரைகளின் உ​ள்ளடகத்தை தெளிவாக கூற​வில்லை என்ற போதிலும் அந்த மாத்திரைகள் தங்களுக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டனர்.

ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போது, அந்த மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகவும் இவ்வாறு கொடுக்கப்படுவதை​ சுகாதார அமைச்சு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குழந்தைகள் பெற்றுக்கொள்வதை இந்த மாத்​தி​ரைகள் தடுத்து நிறுத்தும் என்றுகூறி மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், தா​ங்கள் குழந்தைகள் பெற்றக்கொள்ளாமல் இருப்பதை ​விரும்பவில்​லை  என்றனர்.

முன்னதாக 40 பூர்​வக்குடி  தாய்மார்கள், தங்களின் பிரதிநிதி அஞ்சாங் அலுஜ்டன், ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் சில  அமைச்சர்களை சந்தித்து தங்கள் பிரச்சினையை தெரிவித்தனர். மேலும் தங்களின் பாரம்பரிய கிராமங்கள் நிலைநிறுத்துவது குறித்து  ​மூன்று பக்கங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனு  ஒன்றை, பிரதமர் துன் மகா​தீர் முகமதுவிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.