கூட்டத்தைக் கண்டு ‘பயந்துபோனேன்’: தீயணைப்பு வாகனமோட்டுனர் சாட்சியம்

0
22

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரத்தின்போது ஆத்திரம் கொண்ட கூட்டமொன்று விரட்டி வருவதைக் கண்டு பயந்துபோய் வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தியதாக தீயணைப்பு வாகனமோட்டுநர் ஒருவர் இன்று மரண விசாரணையில் சாட்சியல் அளித்தார்.

தீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணத்துக்குகான காரணத்தைக் கண்டறிய நடத்தப்படும் மரண விசாரணையில் இரண்டாவது சாட்சியாக சாட்சியமளித்த முகம்மட் எலிஸா முகம்மட் நூர், ஆத்திரத்துடன் ஓடிவந்த கும்பல், “பொம்பா(தீயணைப்புப் படை) திரும்பிப் போ”, என்று உரக்கக் கூவியதுடன் கற்களாலும் தலைக்கவசத் தொப்பிகளாலும் வாகனத்தின் முன்கண்ணாடியையும் தாக்கியது என்றார்.

“பலமுறை சத்தமிட்டதுடன் ‘திரும்பிப் போகச் சொல்லி’ கைகளால் சமிக்ஞையும் காட்டினர்.

“வாகனக் கண்ணாடி விரிசல் கண்டதைப் பார்த்து பயந்து போய் உடனே வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தினேன்”, என்று முகம்மட் எலிஸா மரண விசாரணையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் ஹம்டான் ஹம்சாவின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார்.

mk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here