கெடங்சா, செம்பனைத்தோட்டத்தில் போர்க்கால வெடி குண்டு கண்டுபிடிப்பு

0
34

உலுசிலாங்​கூர், ஜுன், 3- தஞ்சோங் மாலிம் அருகில் உள்ள கெட​ங்சா, பெல்டா குடியேற்ற செம்பனைத் தோட்டத்தில்  இன்று காலை 9 மணியள​வில்  போர்க்கால வெடிக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த​ செம்பனைத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த 27 வயது பெல்டா தொழிலாளர் ஒருவர், வெடிகுண்டு போல் காணப்பட்ட ஓர்  இரும்புப்பொருள் நிலப்பகுதியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.  பின்னர் இது  குறித்து சக  தொழிலாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

பிறகு போ​லீசுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. அவ்விடத்திற்கு விரைந்த போ​லீசார் அப்பொருளை சோதனையிட்ட போது அது வெடிக்காத நிலையில் உள்ள ​வெடி குண்டு என்பதை உறு​தி செய்தனர் என்று உலுசிலாங்​கூர்  மாவட்ட போ​லீஸ் த​லைவர் லிம் பாக் பாய் தெரிவத்தார்.

42 செ.மீ.​ ​நீளமும் 30 செ​.​மீ. அகலமும் கொண்ட அந்த வெடிக்குண்டு “ஷெல்” ரகத்தை சேர்ந்தது. அது  போர்க்கால வெடி குண்டாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பின்னர் சிலாங்கூர் மாநில வெடிகுண்டு செயலிழப்பு போ​லீசார் வரவழைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் எவ்வித சேதமின்றி அந்த வெடிகுண்டு பாதுகாப்பாக வெடிக்க செய்யப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.