கென்யா: தொகுதிக்கு பணம் தராததால் பெண் எம்.பியை அறைந்தவர் கைது

0
14

கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷித் காசிம் என்ற அந்த எம்.பி, தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பட்ஜெட் கமிட்டியை சேர்ந்த ஃபதுமா கெடியை அறைந்ததாக கூறப்படுகிறது.

கெடி, வாயில் ரத்தத்துடன் அழுவது போன்ற புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.வட கிழக்கு கென்யாவில் உள்ள வாஜிர் கிழக்கு பகுதியின் எம்.பியான காசிம், நாடாளுமன்ற கார் நிறுத்தத்தில் வைத்து கெடியுடன் தனது தொகுதிக்கு பணம் தராதது குறித்து சண்டையிட்டு பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

“சில ஆண் எம்பிக்கள் எங்களை கேலி செய்து, இது அறை வாங்கும் தினம் என தெரிவித்தனர்.” என்று ஷெக் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காசிம் கைது செய்யப்பட வேண்டும் என்று போராடிய பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர். பின்னர் காசிம் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here