கேரளாவின் இரண்டாவது திருநங்கை – திருநம்பி திருமணம்

0
28

 

திருநங்கையான திருப்தி ஷெட்டி, ஹிரித்திக் என்கிற திருநம்பியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். ஒரு கண்காட்சியில் தாம் இவரை சந்தித்தாகவும் தொடர் நட்பால் ஹிரித்தி மீது காதல் ஏற்பட்டதாகவும் திருப்தி கூறினார். மேலும்  அவர் கூறுகையில் ஹிரித்திக்கும் என்னை மாதிரி பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆபரேஷன் பண்ணியிருக்கார். அவர் மேல எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. அதனால் இவரையே திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்” என்று புன்னகைத்தார்.

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்  என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த திருப்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here