கேவியஸின் விலகல் மீட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை! -மைபிபிபி

0
123

கோலாலம்பூர்- பதவி விலகல் கடிதத்தை கேவியஸ்  மீட்டுக்கொள்ளும் பேச்சிற்கே இடமில்லை. அவர் கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார் என்று மைபிபிபி கட்சியின் பொதுச் செயலாளர்  டத்தோ மோகன் கந்தசாமி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி புதன்கிழமையன்று  முன்னாள் தலைவர் கேவியஸ் விலக்கப்பட்டார் என்ற தனது நிலைப்பாட்டில் கட்சி உறுதியாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

அவர் ஏப்ரல் 25 ஆம் தேதி கட்சியிலி்ருந்து   நீக்கப்பட்டார்.  எனவே, அதற்குப் பிறகான அவரது விலகல் அல்லது அந்த விலகல் மீட்பு என்கிற பிரச்சனையே இங்கு எழவில்லை என்பது தான் கட்சியின் நிலைப்பாடு  என்றார் அவர்.

தற்போது கட்சியின் உதவித்தலைவர் டத்தோ லோக பாலா, போட்டியிட்டுள்ள சிகாம்புட் தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் தான் கட்சி கூர்ந்த கவனத்தை செலுத்தி வருகிறது என்று டத்தோ  மோகன் கந்தசாமி கூறினார்.– பிரியா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here