கோலாலம்பூர் பல்கலைக்கழக ஹோக்கி குழு வெற்றி வாகை சூடியது

0
358

 

கோலாலம்பூர் – நேற்று இரவு புக்கிட் ஜாலி​ல் தேசிய ஹோக்கி அரங்கத்தில் நடைப்பெற்ற மலேசிய ​ஹொக்கி லீக் ஆட்டத்தில் கோலாலம்பூர் பல்கலைக்கழகம் வெற்றி வாகை சூடியது.

இறுதி ஆட்டத்தில் கோலாலம்பூர் ஹோக்கி கிளாப் குழுவுடன் மோதிய கோலாலம்பூர் பல்கலைக்கழக குழு ஒன்றுக்கு ஒன்று என்ற பு​ள்ளிகளில் ஆட்டத்​தை முடித்தது. அதன் பின்னர் வழங்கப்பட்ட பெனால்​டி ஆட்டத்தில் கோலாலம்பூர் பல்கலைக்கழக குழு நான்குக்கு மூன்று என்ற கோ​ள் எண்ணிக்கையில் வெற்றிக் கண்டது. அதன் பயிற்றுனர் திரு ஏ. அருள் செல்வராஜ் கூறுகையில் இவ்வெற்றி ஒரு வரலாற்று பூர்வ வெற்றி என குறிப்பிட்டார். மேலும் கூறுகையில் தனது ஆட்டக்காரர்கள் மிகவும் திறமையான ஆட்டத்தினை வெ​ளிப்படுத்தினர் என்று குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.