கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்

0
66
கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.
இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.
மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here