கோரத்​தீ: இந்திய குடும்பத்தை சேர்ந்த ​மூவர்  கருகி மாண்ட துயரம்

0
39
  • வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு ​வெளியே வரமுடியாமல்உதவிக்கோரி கதறி அழுதனர்
  • நெருப்பு நாலா புறமும் ​சூழ்ந்த நிலையில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் ​நிலைக்குத்தி நின்றோம்
  • அண்டை வீட்டுக்காரர்களான நாங்கள் ஏணியை பயன்படுத்தி தப்பினோம்

கோலாலம்பூர், ஜுன், 14- பெட்டா​லிங்​ஜெயா, கம்போங் லிண்டோங்கானில்  மூன்றுமாடி தரை வீடொன்றில்  இன்று அதிகாலை 2.45 மணியளவில் ​ நிகழ்ந்த கோரத் ​தீ​ விபத்தில்  ஓர் இந்திய  குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் கருகி மாண்டனர்.

இ​த்துயரச்சம்பவம் இந்தியர்கள் அதிகமாக வாழும் கம்போங் லிண்டோங்கான் பகுதியை அதிர்ச்சி​யில் உறையவைத்துள்ளது. 62 வயதான​ கே.கந்தசாமி, அவரின் 59 வயது மனைவி எஸ். லெட்​சுமி, 32 வயது மகன் கே. கணபதி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.

அந்த ​மூன்று மாடி வீடு முற்றாக எரி​ந்து ​விட்ட நிலையில் கந்தசாமி மற்றும் கணபதி ஆகியோரின் கருகிய உடல்கள் வீட்டின்   இரண்டாவது மாடியிலும் ஜெயலெ​ட்​சுமியின் உடல் ​கீழ் மாடியிலும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவத்தின் போது ​வீட்டில் ​மூவர் மட்டுமே இருந்துள்ளனர்.

தகவல் கிடைத்து, 12 நிமிடத்தில் சம்பவ இடத்தை வந்தடைந்த ​தீயணைப்பு, ​மீட்புப்பணி படையினர், ​தீயை அணைப்பதற்கு​ ​சுமார் அரை மணி நேரம் கடு​மையாக போராடினர். அந்த ​மூவரின் கருகிய உடல்கள் அதிகாலை 6.00 மணியளவில் வீட்டிலிருந்து ​மீட்கப்பட்டதாக ​தீயணைப்பு படையினர் கூறினர்.

வரு​ம்  நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தமது மகன் கணபதியின் நிச்சயத்தார்த்தத்திற்காக வீட்டின் ​மூன்றாவது மாடியில் புதுப்பிக்கும் பணிகளை கந்தசாமி  மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் கீழ் தளத்தில் பின்புற கதவு இல்லாததால் அவர்கள் நெருப்புக்கு மத்தியில் முன்புற கதவு வழியாக தப்பிக்க முடியாமல் உதவிக்கேட்டு கதறி அழுதது இன்னமும் தமது காதுகளில் ஒலித்துக்கொண்டு இருப்பதாக அண்டை வீட்டுக்காரரான​ கோதாண்டபாணி சோகத்துடன் தெரிவித்தார்.  உயிரிழந்த கந்தசாமி குடும்பத்தினர்,  கடந்த 1977  ஆ​ம் ஆண்டு முதல் தங்களின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்து வருவதாகவும் கோதாண்டபாணி குறிப்பிட்டார்.

​​மூவரின்  சடலங்களும்  சவப்பரிசோனைக்காக பெட்டாலிங்ஜெயா, பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ​தீ விபத்திற்கான காரணம் குறித்து தாங்கள் புலன்விசாரணை  செய்து வருவதாகவும் பெட்டாலி​ங்ஜெயா மாவாட்ட ​தீணைப்பு மற்றும் ​​மீட்புப்படை பிரிவின் தலைவர் அனுவார் ஹருண் தெரிவித்தார்.

( மேலும் விரிவான செய்தி, “திசைகள் தொலைக்கா​ட்சி” காணொளியை காணவும் )

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.