சட்டப் பிரிவை  மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு- அசாம்

0
64

ஜொகூர்பாரு, ஜூலை 13- இளைஞர்களின் வயது வரம்பு தொடர்பாக எழுந்து வரும் சர்ச்சையின் எதிரொலியாக இன்று ஜோகூர் மாநில பாக்காத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவு செயலாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இளையோர் இயக்கம் மற்றும் மேம்பாட்டு இயக்கம் தொடர்பான சட்டப்பிரிவு 668 -ல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்  இளையோர் மத்தியில்  தொடர்ந்து செயல்பட அவர்களின் வரவேற்பைப் பெற கடினமாக உள்ளது என்றார் அசாம் மெகார்.

மேலும் கூறுகையில், ஜொகூரில் மட்டும் 48 மணிநேரத்திற்குள்  இந்த சட்டப்பிரிவு இதுவரை மூன்று முறை மாற்றப்பட்டிருக்கின்றது. இளையோருக்கான இயக்கப் பதிவு தொடர்பான சிக்கல்கள்  2010 முதல் பேசப்பட்டு வருகின்றன.இருந்தப்போதும்  சரியான தீர்வு இதற்கு வழங்கப்படவில்லை.

எந்த ஒரு இயக்கப் பதிவிற்கான சட்டப் பிரிவை  மாற்றம் செய்ய, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மாநில அரசு இது குறித்து கருத்துகளை வெளியிடுவது மேலும் குழப்ப நிலைக்கு இட்டுச் செல்கின்றது என்கிறார் அசாம் மெகார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.