சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக சென்றது – இஸ்ரோ

0
20

கடந்த மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந்தேதி வரை படிப்படியாக 5 முறை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தீட்டிய திட்டத்தின்படி, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தின் என்ஜினை 1,738 வினாடிகள் இயக்கி, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை செலுத்தினர். இந்தப்பணி காலை 9.02 மணிக்கு செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.