சமயப்பள்ளிக்கு தீ வைப்பு; இரண்டு இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

0
259

கோலாலம்பூர் , கம்போங் பாருவிலுள்ள டாருல் குரான் இத்திபாக்கியா தாஃபிஸ் சமயப்பள்ளிக்கு தீ வைத்து 22 மாணவர்களை கொலைச் செய்ததாக 16 வயதுடைய இரண்டு இளவட்ட இளைஞர்கள் மீது நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அவர்கள் மறுத்து விசாரணைக் கோறினர்.

14/9/2017 ஆம் தேதி அதிகாலை 4.15க்கும் அதிகாலை 6.45க்கும் இடையே அக்குற்றத்தைப் புரிந்ததாக மரணதண்டனை வழங்க வகைச் செய்யும் சட்டத்தின் கீழ் 22 குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது.

அவர்களுக்கான அக்குற்றச்சாட்டு வரும் பிப் 19-ஆம் தேதி மறுசெவிமடுப்புக்கு வருமென நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தேதி நிர்ணயம் செய்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here