சமய ஒருங்கிணைப்பு அறவாரியம்

0
361

மக்கள் கூட்டணி அரசுக்கும்,
பிரதமர் துறையமைச்சர் மாண்புமிகு பி.வேதமூர்த்தி
அவர்களின் கவனத்திற்குரியது!

(இந்து) திராவிடர் – தமிழர் – சமய ஒருங்கிணைப்பு அறவாரியத்தை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துமேயானால்; அதுகுறித்த கருத்தும் ஆய்வும் கண்டறிய வேண்டிய பல உண்மைகளும்,தீர்க்கப்பட வேண்டிய தர்க்க ரீதியான முன்னெடுப்புக்களுக்குரிய வழிமுறைகளும் ஏற்கத்தக்க தீர்வுகளும் என்றளவில் கருத்துக் கலந்துரையாடலுக்கான கட்டுரையாகும் இது!

முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு சமய, அறநெறி, கலைப்பண்பாட்டு, குமுகாய இயக்கங்களின் பேராதரவுடன் 12/8/18 – 4.00 மணியளவில், கோலாலம்பூர், ஜாலான் அசுலான்ஷா 3_வது, மைல், டிசிஎல் கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள பெரியார் அரங்கில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வி.கணபதிராவ் அவர்கள் தலைமையில் படித்து விவாதிக்கப்பட்டது.
************************************************************************

படைப்பு!: முனைவர் – பெருஅ.தமிழ்மணி அவர்கள் (சமூக, அரசியல் ஆய்வாளர், மூத்த ஊடகவியளார்- மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தேசியத்தலைவர்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1) இந்து மதவாரியம் தேசிய- மாநில அளவில் அமைக்கப்போவதாக அறிவிப்பொன்றை அண்மையில் கண்டுக் கொள்ள நேர்ந்தது. தற்போதைய அரசின் நோக்கம் அவ்வமைப்புக்குள் எப்படி அமையப்போகிறதோ; அல்லது எப்படி திட்டமிட்டு அமையுமோ,? அதுபற்றிய முழுமையான தெளிவான பார்வையிருப்பதாக இதுவரை தெரியவில்லையென்றாலும்; இருப்பினும் கீழ் கண்ட பரிந்துரைகளைத் தன்னிலை விளக்கமாக புதிய அரசாங்கத்தின் பார்வைக்கு முன்வைக்க வேண்டியுள்ளது. அதையே மாண்புமிகு, அமைச்சர் பி.வேதமூர்த்தி பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் முன் மொழிய வேண்டியுள்ளது.

2) அதற்கு முக்கியக் காரணம் முன்னைய பாரிசான் ஆட்சியில், அரசின் திட்டமைப்பில் இப்படியொரு பார்வையுமில்லை, பயணமுமில்லை!அதனால் இன்றைய அரசில் அத்தகையப் பயணத்திற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளமையால், அது குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது, அதுஅவசியமும் அவசரமும் கட்டாயத் தேவையாயுமாகியுள்ளது.

3) அதாவது; நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களையெல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அவற்றை ஆட்டிப்படைக்கும் அதிகார மையமொன்றை அமைக்க எண்ணுகிறதா? என்கிற ஒருவகை கருத்து நிலவினாலும்! அது உண்மையா? பொய்யா ? என்றதொரு கேள்வி நிலவினாலும் – தொடக்கத்தில் அப்படியொரு கருத்துப் பதிவாகியிருப்பதாலே, அதுகுறித்த விவாதமும் தேவைப்படுகிறது, இருப்பினும் அதைவிட இன்னும் உருப்படியான மேம்பட்ட ஒரு சிந்ததனை மாற்றத்திற்கு ;மலேசியாவில் வாழுகிற திராவிடர்களும் தமிழர்களும் சிந்திக்கவும் அது குறித்துக் கவனிக்கவும் வேண்டியுமுள்ளது.
அதாவது ; அரசு நேரடியாக சமய விவகாரங்களைக் கட்டமைக்கிறதென்றாலும், ஆலயங்கள் குறித்து ; மற்றொரு பார்வையிருக்குமேயானாலும், அது குறித்த சமூகக் கவனயீர்ப்பும் முக்கியமானதாகயிருக்க வேண்டியது அவசியமாகும்!
அதாவது; அவை எப்படிப்பட்ட ஒழுங்கு முறையில் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைதான் இது!

4) முதலில் இந்துமதம் என்ற பெயர் பலகையை முற்றாக அகற்றிவிட்டு,தமிழர் சமய நெறி நல அறவாரியம் , அல்லது திராவிடர் சமய நெறி அறவாரியம் என்று இதில் ஏதாவது ஒருபெயரை நிலைநிறுத்தலாம், அல்லது “திராவிடர்- தமிழர் சமய நெறி அறநிலையம்” என்றுகூட வகைப்படுத்தலாம்.

அதாவது இந்துவென்றால் பார்ப்பனியம், பிராமணியம், அல்லது ஆரியம் என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதன் வழி சமஸ்கிருதமே முன்னணி மொழியாகவும் இந்துவென்ற கட்டமைப்பில் இடம் பெற வேண்டியுள்ளது.

அதாவது; அந்த மொழியே தேவப்பாஷையாகவும் கொள்ளவேண்டும் என்ற நியதியும் ஐயாயிரம் ஆண்டுக் காலமாக வலியுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்ல அம்மொழிகளில் எழுதப்பட்டுள்ள இராமாயணம், மகாபாரதம், மனுஸ்சுருதி போன்றவை இந்து மதம் அல்லது பிராமணத்தின் வழிபாட்டு நூல்களாகவும்,அவர்களின் வாழ்வுக்கான நெறியாகவும் கருதப்படுகிறது. அதை மலேசிய சூழ்நிலைக்கு தக்கவாறு இன்று மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

அதனால் வேதப்பாடங்களும், ஆகமவிதிகளும் சமஸ்கிருத மந்திரங்களுமே தமிழர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆலயங்களிலே நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

5) அதாவது; ஆரிய – திராவிடப்போராட்டமானது கிட்டத்தட்ட ஐயாயிரமாண்டுகளாகயிருந்து வருகின்றன. இன்றைக்குள்ள இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு முன்பே; ஒரு நிலப்பகுதியான குமரிக்கண்டம், அதாவது ஹராப்பா, மொகஞ்சாரோ நாகரீகத்தொடக்கத்திலிருந்து; திராவிடமாக உருமாறியுள்ளது. பின்னர் தமிழர்களாகவும் உருவெடுத்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேற்பட்ட கடற்கோள்கலால் இக்கண்ட நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதன் நிலப்பரப்பு இன்றைக்குரிய இந்திய, ஆப்பரிக்க, அமெரிக்க, ஆஸ்ரோலிய மத்திய ஆசியா கண்டங்களிலும் ஊடூருவியுள்ள மிகப் பெரும் நிலப்பகுதியாகும்.

6) அதற்கு ஆதாரமாக பல்வேறு நாடுளில் இன்றைக்கும் கூட அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகள் உண்மையை வெளிப்படுத்தி வருகின்றன. அதேவேளை பிறமொழிகளில் தமிழ்ச்சொற்களின் வெளிப்பாட்டுத்தன்மைகளும் அதிகமாக மிளிர்ந்துள்ளன. இவை பிற மொழி ஆய்விலிருந்தும் வெளிப்படுத்தப்படுகின்றன. அதேவேளை , பல்வேறு நாடுகளில் தமிழரின் பண்பாட்டுக்கூறுகள் பலயினங்களின் பழக்க வழக்கங்களில் அழுத்தம் பெற்றுள்ளன.இவை உலகமைப்பில் முக்கிய ஆதாரங்களாகப் பதிவுற்றுயிருக்கின்றனஅதனால் ஆரியமென்று உருவெடுக்குமேயானால், அதற்கு நேரடியான சொல்லாகத் திராவிடமே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

7) அதனால், ”இந்து” என்ற சொல்லுக்கான பின்புலத்தை முன்னெடுக்கும் போது, தமிழர் சமயம், அவர்தம் வாழ்வியல் நெறி என்றளவுக்கான அடிதளங்களில் தமிழர் சமய நெறிகள் உள்ளன. சைவம், சமணம் போன்ற இன்னப்பிற மதங்களின் பின்பற்றுதலும் புத்தமத நெறிதாக்கங்களும் தமிழரின் வாழ்வியல் நெறிகளில் ஆரியர்களின் வருகைக்கு பின்பு இந்துமத நெறிகளாக பதிவாகிவிட்டன.
சிவப்புராணம் உள்ளிட்ட நூல்களிலுள்ள பல்வேறு எடுத்துக்காட்டுகளும், அதையொட்டி; தேவாரம் திருவாசகம் திருப்புகழ், அருட்பா போன்றவைகளுடன் பதினெட்டுச் சித்தர்களின் வாழ்வியலும் தமிழ் மருத்துவமும் அறிவியலும் நெறிச்சார்ந்த முன்னெடுப்புகளோடு, இந்து மத ஆகம, வேத இதிகாச நெறிகளுக்கு இவை முற்றாக முரண்பட்டிருக்கின்றன. இவை ஆரியப்பண்பாட்டிற்கும், திராவிடப் பண்பாட்டிற்குமான நிறைய வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் முன்வைக்கவே செய்கின்றன.

புத்தர் கூட இந்துமத ஆகம , வேத இதிகாசச் செயல்பாடுகளுக்கு முரணாகவேயிருந்தார் என்பதற்காகவே ;அவரை ஒழித்துக்கட்டும் வழிகளை ஆரியமத விற்பன்னர்கள் மேற்கொண்டார்கள் என்பதும் வரலாற்றுப் பதிவுகளாகும்.

8) அதனாலேதான் இங்கு இந்து என்ற சொல்லாதிக்கத்தை முன்மொழியாமல் இருப்பது நல்லது,இந்துவென்றாலே பிராமணமதமென்றாகிவிட்டதாலும் அவர்களின் சமஸ்கிருதமே வேதமொழியாகி விட்டதாலும், தமிழையும், தமிழர் அல்லது திராவிடர்களையும் அடிமைப்படுத்தவும் தொடங்கின என்றளவிலும், நால்வகை வர்ணாசர்மங்களை வலியுறுத்துகிற மனுஸ்சுருதியில்பிராமணன் பிறப்பால் உயர்ந்தவனென்றும், சத்திரியன்-வைசியன் இடைப்பட்ட சாதிக்குரியவனென்றும், சூத்திரனென்பவன் தாழ்த்தப்பட்டவனென்றும்,அவனை ஆலயங்களில் மட்டுமல்ல,மக்கள் வாழுகிற பகுதிகளில் கூட ஒதுக்கிவைக்க வேண்டுமெனவும், அவன் காலிலே செருப்பு அணியக்கூடாதெனவும், அவன் வேசிகளுக்கும் தாசிகளுக்குமாகப் பிறந்தவனென்றும் ஒதுக்கிவைக்கவும் ஏற்றத்தாழ்வை முன்னெடுக்கவுமான மதமாக இந்துமதம், உருவெடுத்துள்ளது.

இப்படி! மனிதக் கூறுகளின் பிறப்பையும் வளர்ப்பையும் அறிவுக்குப்புறம்பாக முன்னெடுக்கிற மனுஸ்சுருதியை வேதநூலாக மட்டுமல்ல, கடவுளால்தான் இப்படியொரு கட்டமைப்புக்கொண்டு வரப்பட்டது என்று முன் மொழியவும் வழிமொழியவும் செய்யப்பட்டிருக்கிறதென்றால், அப்படிப்பட்ட இந்துமதத்தையோ, அதன்வழிமுறைகளையோ அதன் முன்னெடுப்புகளையோ அரசாங்கத் துறையில் ஒரு வாரியத்தில் கட்டமைக்க வேண்டியது அவசியந்தானா? என்று கேள்வி பிறக்கிறது.
எனவே, இது குறித்தறிய ,கடந்த காலம்- நிகழ்காலம்- எதிர்காலம் என மூன்றுக்கால கட்டங்களில் ஆய்ந்து அலசி, அறிவுக்கும், அதுவும், நல்லது எது! கெட்டது எது! என்றறியும் பகுத்தறிவைத் துணைக்கொண்டு முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.

9)அதற்கு முக்கிய காரணம்,மத, பழக்கத்தில் புழக்கத்தில் அறிந்தும் அறியாமலும் சிலர், அல்லது பலர் விருப்பங்களைக் கையாளலாமென்று சில விதிவிலக்குகளுக்கு உரிமையுண்டென்றாலும், அவை,அரசாங்க நடைமுறைக்கு வருவதாகயிருக்குமேயானால்; இந்து-வென்ற ஒரு வார்த்தையின் பயன்பாட்டிலிருக்கிற மோசமான உதாரணங்களயெல்லாமே; இந்துமதக் கூறுகளாகப் பதிவிடப்படுமேயானால், அதனுடைய தவறான முன்னுதாரங்கள், தேவையின்றி கட்டயாகமாக்கப்பட்டுவிடும், அதனாலே, சொல்லப்படுவதும் அமல்படுத்தப்படுவதும் அரசாகயிருப்பதாலும்அல்லது அரசின் ஒருபகுதியாக; ஒரு வாரியமாகயிருப்பதாலும் அவை பின்னர் மலேசிய அரசுக்கு தேவையற்ற முன்னுதாரங்களாகிவிடும்.

10) எனவே, இங்கு இந்துமதம் என்கிற கோட்ப்பாட்டுகுள் 50 ஆயிரம் மலையாளிகளும், 2 -லட்சம் தெலுங்கர்களும் 20 ஆயிரம் கன்னடர்களும் 3 ஆயிரம் குஜாரத்திகளும் இருப்பார்கள்! இருப்பினும் குஜாரத்திகளுக்கு வேதமொழியாகயிருப்பது சமஸ்கிருதமாகும் அடுத்து, கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்களுக்கு மதம் சார்ந்து எந்த நூல்களும் தொடக்கக் காலத்திலிருந்து கிடையாது,சிலருக்கு வேண்டுமானால் குரு வழிப்பாட்டு முறைகளும் வழிகாட்டுதலும் இருக்கலாம், குரு வழிப்பாடானது ஒரு மதவழிபாடல்ல; இருப்பினும் அவர்கள் அனைவரும் திராவிடக் கட்டமைப்புக்குள் இருப்பதாலே தமிழர் நெறிச்சார்ந்த அத்தனை சமய நூல்களும் அவர்களையும் சார்ந்ததேயாகும்!

காரணம்அவர்கள் இன்றைக்கு பேசுகின்ற மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலமொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதாலே, அவர்கள் திராவிடக்கட்டமைப்புக்குள் வந்துவிடவேண்டும் வருவதற்கான வழிவகைகளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும். அவர்கள் என்றைக்கு தனிமொழிக்குள் நுழைந்தார்களே, அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்கள் போன்றே அவர்களும் ஆரிய வழக்கிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் சிக்கித் தவித்துக்கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு பிராமணியம், கடவுளின் பெயராலும் சமஸ்கிருத மந்திர தந்திரங்கள் மூலமாகவும் திராவிடயினக் கூறுகளைக் கட்டிப்போட்டு அடிமைப்படுத்தி வந்திருக்கிறது. இந்த நிலையை நன்கு சீர்தூக்கிப் பார்த்து இந்து என்கிற அடைமொழியை முற்றாக நீக்கிவிட்டு “திராவிட- தமிழர் – சமயநெறி வாரியமென்றை நிலைநிறுத்துவதே அறிவுக்கும் இந்த நாட்டுக்குமான முன்னெடுப்புள்ள வழிக்காட்டுதலாகயிருக்க முடியும்.

இந்த கோரிக்கைக்குள்ளேதான் 20 லட்சம் தமிழர்களின் அடையாளம் மிளிரவும் முடியும், இருப்பினும் இவர்கள் அவரவர் சாதிக்குள்ள தமிழர்களாகவே அடையாளமிட்டு வருதாலே, இவர்களிடையே எங்கு எப்படி எந்த சூழ்நிலையிலும் ஒற்றுமை நிலவாதப்படி- சாதியுமென்பது இந்து மதமென்ற பெயரால் பிளவுப்படுத்திக்கொண்டுதான் வருகிறது. எனவே இவ்வளவு பலவீனமாகயிருக்கிற அனைவரையும் ஒன்றுப்படுத்த திராவிடக் கட்டமைப்புக்குள் வருவதுதான் ஒரேவழியாகும்! திராவிடக்கட்டமைப்பு மட்டுந்தான் ஆரியத்தை எதிர்த்துப்போரிடம் வல்லமைக்குரியதாகயிருக்கும்! அதாவது கடவுளையும்- மதத்தையும்- மனுஸ்சுருதி – அறிவுக்குப்புறம்பாக பரப்பிவரும் போக்கை முற்றிலுமாகக் களையெடுக்க திராவிடக்கட்டமைப்பே சிறந்த வழி முறையாகும் இதையும் அரசியல் கலக்காமல் பார்ப்பதும் அவசியமாகும்

11) இங்குள்ள இந்து சங்கம் போன்ற இன்னப் பிற சமய அமைப்புக்கள் கூட காலங்காலமாக காஞ்சி காமக்கோடி பீடாதிபதியிலேயிருந்துதான் ஆலோசனைப்பெறுவதை வழக்கமாக்கொண்டுள்ளன. அந்த அமைப்பானது முற்றிலும், பிராமணியத்தையும் மனுஸ்சுருதியையும் முன்னெடுக்கும் அமைப்பாகும்.அங்கு பார்ப்பணர்களுக்கு ஒருவகையான மரியாதையும்,வைசியன்,சத்திரியன் சூத்திரனுக்கு ஒருவகையான ஏற்றத்தாழ்வின்படி மரியாதையும் வழங்கப்பட்டுவருகிறது.
அங்கு முழுமையாக மனுஸ்சுருதி -பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி அங்கு பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையை இங்குள்ள இந்து சங்கம் போன்ற அமைப்புகள் இங்குள்ள மக்களிடம் தப்பும் தவறுமாகப் போதிக்கவும் துவங்கியுள்ளன.

12) எனவே,இங்குள்ள மக்கள் அடிப்படையிலே தோட்டப்புற சூழ் நிலையில் வார்க்கப்பட்டவர்கள், அவர்களுக்கு வேத ஆகம் முறைகள் அவசியமற்றது, தேவாரம் திருவாசகம், திருப்புகழ், அருட்பா போன்றவற்றைப் போதித்தாலே போதுமானதாகும், பக்தி இலக்கியததிலே,தமிழர் நெறிச்சார்ந்த வாழ்க்கையும் அதில் அமைந்திருக்கிறது.

13) அந்த அடிப்படையில்தான் இங்குள்ள ஆலயங்களில் தமிழில் அர்ச்சனையைக்கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. பெருமளவு தமிழர்கள் பங்குப்பெறும் ஆலய நிகழ்ச்சிகளில் தமிழை முன்னெடுப்பதில் எந்த பின்னடைவும் இருக்கப்போவதில்லை!

14) ஆண்டவனென்றுயொன்றை கருதிவிட்ட அல்லது நம்பிவிட்ட மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில்தான் வழிப்பாட்டுமுறையும் இருக்கவேண்டும் என்பதென்ன,அவ்வளவு பெரிய குற்றமா? அதேபோன்று தமிர்களின் திருமண வாழ்க்கைத் தொடக்கத்தையும் அவர்களின் மொழிச்சார்ந்த பின்புலத்தைக்கொண்டுப் பயன்படுத்துவதில் என்ன குற்றமிருக்கப்போகிறது?

அதேவேளை திருமணங்களில் தமிழர்கள் உலகப்பொதுமறையான திருக்குறளிலுள்ள இல்வாழ்க்கை அதிகாரப் பாக்களை ஓதி பின்பற்றச்செய்வதானது ஏற்கத்தக்கதுதானே; எனவே, உண்மையிலேயே குற்றம் குறையென்று பார்த்தால் அல்லது குறைச்சொல்லத் துவங்கினால், தமிழர்களின் திருமணங்களின் போது, ஓதப்படும் சமஸ்கிருத மந்திரத்தில் எவ்வளவு ஒழுக்கேடான கருத்தியல் பதிவிடப்படுகிறது.எவ்வளவு மோசமான விளக்கமும் முன் வைக்கப்படுகின்றது என்பதை அந்த மந்திரங்களைப்பற்றிய தனியாய்வை விளக்க வேண்டி வந்தால் தமிழர்கள் தலைக்குனிய வேண்டிவரும்! அதைவொரு தனி அத்தியாயமாக பதிவிடவும் விவாதிக்கவும் வேண்டியுள்ளது. (பின்னொரு சமயத்தில்; அதைப்பற்றியும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

15) எனவே அரசு தனது கட்டுப்பாட்டில் அமைப்பதாகக் கருத்தாக்கம் பெற்றுள்ள இந்து மத வாரியமானாதை, முற்றாகத் தவிர்த்துவிட்டு, திராவிட- தமிழர் சமயநெறி வாரியமாகவும்-அது;தேசிய -மாநில- மாவட்டளவில் அமையப்படுவது; அமைக்கப்படுவது அவசியமென்றாகிறது.

16) அதனால் அதற்குரிய கட்டமைப்புகளுக்கான காரணங்கள் என்னவாகயிருக்க வேண்டும், எப்படி இருப்பது அவசியம் என்று தீர்மானிப்பது அவசியமாகும். காரணம் சுயமரியாதையுள்ள ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டுமானால் அந்த சமூகத்தின் வாழ்வில் சமயமொன்றைப் பின்பற்றுவதாகயிருப்பது அவசியமென்று கருதுவதாலே, அந்த கட்டமைப்புகள் தேவையற்ற மூடநம்பிக்கைகளையும், அறிவுக்குப்பொருந்தாத முட்டாள் தனங்களையும் கண்டிப்பாகத் தவிர்த்தாக வேண்டும். எனவே, மனித வாழ்க்கையானது நம்பிக்கையால் மட்டுமே கட்டமைக்கப்படுவதில்லை, அதில் அவநம்பிக்கை ஏற்படாமல் இருக்கவேண்டியதும் அவசியமென்றால் பகுத்தறிவால் சீரமைக்கப்பட வேண்டியதொன்றாக கருதவும் வேண்டும், என்று உணர்வதும் அவசியமென்பதாலே இக்கருத்தரங்கு வழி தீர்க்கமான சில முடிவுகளை வைக்க வேண்டியுள்ளது.

பரிந்துரைகளும், பரிமாற்றங்களும்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நாட்டில்இதுவரைக்கும்,சட்டவிரோதமாக குறிப்பாக அரசாங்க நிலங்களை ஆக்கிறமித்துள்ள ஆலயங்களையும்,அதேவேளை சில மேம்பாட்டுத்திட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஆலயங்களும் சில தனியார் நிலங்களில் அமையப்பட்டுள்ள ஆலயங்களையும் அதேவேளை சில குடும்பங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஆலயங்களையும் உடனடியாக நேர் படுத்தவும் சீர்படுத்தவும் வேண்டியுள்ளது. அதை முறைப்படுத்தவும் வேண்டியுள்ளது, இத்தகைய ஆலயங்களே நீதிமன்ற நடவடிக்கைகளில் சிக்கி உடைப்படவேண்டியவைகளாகயும் உள்ளன.
இவை–30/.40/50/60/70/80/90 ஆண்டுகள் பழமையானவைகள் என்ற ஒரே காரணத்திற்காக எந்த அனுமதியும் நிலயுரிமையும் பெறாதவையாகயிக்கும்போது எப்படி உடைபடாமல் இருக்க முடியும்?

இதில் பல ஆலயங்கள் பதிவகத்தில் கூட பதிவுச் செய்யாமலும் இன்றுவரை இருந்து வருகின்றன. இந்த நிலபாடு ஒருசில காலகட்டங்கள் வரை தொடரலாமேயொழிய, அவற்றைச் சட்டத்தின் அடிப்படையிலும் உரிமையின் அடிப்படையில் காலவோட்டத்தில் நடவடிக்கைக்கு உள்ளாக்கும்போது ஆலயங்கள் உடைபடுவதும் பின்னர் அதையொரு உணர்ச்சிப்பூர்வமான விவகாரமாக்கி அதை முன்வைத்து அரசியல் விளையாட்டை நடத்துவதுமாகயிருப்பது மிக நீண்டகாலமாக, ஒரு தொத்து நோயைப்போன்று நீடித்து வருவதை இன்றுவரைக் காண முடிகிறது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் , திராவிடர் – தமிழர்-சமய நெறி அறநிலையமானது;எந்த இடத்தில் எத்தகைய ஆலயம் தேவைப்படுகிறது, என்பதைக் கண்டறியவும்.

ஆலயம் அமையவிருக்கிற இடத்தில் குடியிருப்போரின் ,எண்ணிக்கை குறைந்தது ஆயிரமாவது அடங்கியிருக்கிறென்று கண்டறியவும் வேண்டும்!

அதேவேளை தனிநபர்கள் சில குடும்பங்கள் என்றளவிலுமாக கோரிக்கைகள் கேட்கப்படுகிறா? அல்லது குழு மனப்பான்மையில் கேட்கப்படுகிறாதா? அல்லதுகுறிப்பிட்ட சாதி அடிப்படையில் விண்ணப்பிக்கப்படுகிறதா? என்று ஆராயவேண்டும்.

எனவே! எந்த அடிப்படையிலும் எது தேவையென்றாலும்; குறைந்தது ஆயிரம் பேரிடமாவது ஓர் ஆலயம் அமைய கையொப்பம் பெறுவதும்அவர்களின் அடையாள அட்டை நகலை இணைக்கவும் வேண்டும்.

அதேவேளைஆலயம் எந்த பெயரில் அமைய விருப்பங்கொண்டுள்ளார்கள் என்பதையெல்லாம் முற்றிலுமாக அறிந்து சரியான ஆய்வுக்கு உட்ப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

அதேவேளை சங்கங்களின் பதிவுச்சட்டப்படி, எந்த பெயரில் ஆலயம் கட்டமைக்கப்படுகிறதோ அந்த பெயரில் பதிவிடுவதும் பின்னர் ஆலயம் கட்டுவதற்குரிய அரசாங்க நிலத்தில் குறந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலத்தையாவது கையகப்படுத்துவதும் அவசியமாகும் குறிப்பாக அந்தந்த மாநில அரசுகளின் மூலம் நிலத்தைப்பெற விண்ணவிப்பதும், நிலப்பட்டாவை பெறுவதும் அதற்கு முன் இடத்தை அடையாளங்காணுவதுமாகயிருக்க வேண்டும். இத்தகைய கட்டமைப்பு வேலைகளெல்லாம் முடிவுற்றப்பின்னர்-ஆலயத்தை முழுமையாக அரசு செலவில் கட்டி முடிப்பதற்கான திட்டமிடலையும், அதற்கான நிதி, ஒதுக்கீடுகளையும் அரசு மூலமாகப்பெறுவதும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் ஆலயம் எழுவதும்அவசியமாகும்!

ஆலயங்கள் கட்டி முடிக்கப்பட்டவுடன்,ஆலய வழிப்பாட்டுமுறைகளில் பங்குப்பெறும் அர்ச்சர்கர், துணை அர்ச்சகர்,,உதவியாளர், ஆலய வெளிப்பணியாளர் இருவரென-ஆக மொத்தம் 5 பணியாளர்களைக் கொண்டுக் கட்டமைப்பதும், அவர்களுக்கான சம்பளம்; ஆலய நிர்வாக வழிப்பாட்டுச்செலவுகளையும் அரசின் சமய அறவாரியமே மேற்கொள்ள வேண்டும்!

முழுநேர பணியாளர்களாக வைத்துக்கொள்வது அல்லது ஒப்பந்த ஊழியர்களாக வைத்துக்கொள்வது,அதை தீர்மானிப்பதும்,அர்ச்சர்களுக்கான சம்பள முறையையோடு மேற்கொள்ளப்படும் மற்ற செலவீனங்களை சமயவாரியமே முழுமைப்படுத்தி ஏற்றுக்கொள்ளுவதுமாகவே இருப்பதற்கு அரசின் முழுமையான ஆதரவு பெற்ற சமய வாரியத்திற்கு எல்லா உரிமையும் அதுகுறித்தான எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டிய சட்ட வரைவுகளையும் கட்டமைத்துச்செயல்பட வேண்டிய ஆளுமைப்பெற்றதாக அரசின்– திராவிடர் – தமிழர்- சமய அறவாரியம் இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட அதிகார வலிமைக்கொண்ட வாரியத்தைக் கட்டமைப்பது குறித்து இன்றைய மக்கள் கூட்டணி அரசு பிரதமர் இலாகா மூலமாகச் சிந்திக்கவேண்டும், இந்த நடைமுறையை, ஏறக்குறைய பிரதமர் இலாகாவிலுள்ள இசுலாம் மதப்பிரிவின் மூலமாக நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை அமைப்பதும் அந்த பள்ளிவாசல்களில் பணியாற்றுகின்ற இமாம் முதல் ஏனைய பணியாளர்கள் வரை அனைவரும் அரசு ஊழியர்களாக்கி அவர்களுகான மாதந்திர சம்பளமும் வழங்கப்பட்டுவருகிறது, இதேபோன்ற நிலைபாட்டில் புதிய அரசு பிரதமர் துறையில் சர்வமதங்களுக்கான வாரியத்தைக்கட்டமைத்து, அதில் இந்நாட்டிலுள்ள அவரவர் மதங்களுக்கான உள்கட்டமைப்பு முறையில் மற்ற சமயங்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதிய கட்டமைப்புகளை உருவாக்கிச்செயல்பட ஆக்கரமாக அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆலயங்களை ஒருமுகப்படுத்துதல்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அதேவேளை மலேசியாவில் இதுவரைக்குமான ஆலயங்களைக் கண்டறிவதும்,அவற்றின் எண்ணிக்கையை துல்லிதமாக கணக்கிடுதலும்,அந்தந்த ஆலயங்களில் தொன்றுத்தொட்டு வந்துள்ள அதன் நிர்வாக நடைமுறைக்களைக் கண்டறிதலும் அவசியமாகும்

அப்படி கட்டமைக்கப்பட்டுள்ள ஆலயங்களைப்பராமரிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வோராண்டும் ஆலயங்களின் தகுதி, அதன் உள்கட்டமைப்பு, அவ்வாலயம் அமையப்பெற்றுள்ள சுற்று வட்டாரத்தன்மைக்கேற்ப அதனுடைய செலவுகளுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்,அல்லது அந்த ஆலயத்தை முழுமையாக தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளுவதாகயிருந்தால் அரசின் சமய வாரியமே அவ்வாலயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளப்படும் , அந்த ஆலயங்களின் நிதி, அதன் முழுமையான செலவுகளையும் வாரியமே கவனத்தில் கொண்டிட வேண்டும்.

இவ்வாலயக்கட்டமைப்புகளில் அரசின் மானியத்தையோ, அதன் நிர்வாகக்கட்டமைப்புக்கு நிதியையோ பெறாதயளவுக்கு சுயவலிமையுள்ள ஆலயங்களை இணைத்துக்கொள்ள வேண்டியதில்லை! குறிப்பாக செட்டியார்கள் ,யாழ்பாணத்தவர்கள், கோலாலம்பூர் தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள ஆலயங்கள் யாவைவும் அந்தந்த ஆலயங்களின் சுய வருமானத்திலேயே கட்டமைக்கப்பட்டுவருகின்றப்படியாலும்,

அவ்வாலயங்களுக்கு பராமரிப்புக்கு,அரசு மானியம் தேவைப்படாது என்பதாலும்,அவ்வாலய கணக்கு வழக்கு முறைகளை எப்படி இதுவரைக்குமான நடைமுறையில் கையாளப்பட்டுவருகிறதோ, அதன் படியே விட்டுவிடுவது நலம்!

குறிப்பாக கோலாலம்பூர் மகா மாரியம்மன தேவஸ்தானம் செந்தூல்செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம் இன்னும் இதுபோன்றவற்றை மேற்கோளாகக்கொள்ளலாம்.

இருப்பினும் அவ்வாலயங்களிலுள்ள நடைமுறை செயல்பாடுகளையும், அதனுடைய வரவு செலவு போன்றவற்றின் உள்ளடக்கங்களை சமய வாரியத்தின் கவனத்திற்கு ஆண்டுக்கொரு முறை சமர்பிப்பது அவசியமென உணர்த்துவதும் தேவையான நடைமுறையாகயிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் அவசியமே!

அப்படியிருந்தால் மட்டுமே அவ்வாலயங்களின் கட்டிட, மண்டபம், ஆலயவிரிவாக்கம் போன்றவற்றிற்கு ஏதும் நிதி தேவைப்படும்போது விண்ணப்பிக்கலாம் அதன் வழி நிதியையும் பெறமுடியும்! என்றவிதி முறையைக்கொண்டு வருவது அவசியமானதாகும்!

கவனிக்கவும் விரிவுப்படுத்தவும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

திராவிட,தமிழர், சமய நெறி அறநிலையத்துறையென்று ஒரு துறையை அரசு அமைக்க எண்ணுமேயானால், மேற்கண்ட கருத்துகளை, விரிவாங்களை பரிசீலிக்கலாம், அக்கருத்து வழி, அல்லது பரிந்துரை வழி இன்னும் சில மேம்பாடுகளைப்பற்றியும் சிந்திக்கலாம்!

இதுவரை மானியங்கள் என்றவகையில் ஆலயங்களுக்கு பல்வேறுவகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன். அவை-

* சட்டமன்ற உறுப்பினர்
* செனட் சபை உறுப்பினர்
* நாடாளுமன்ற உறுப்பினர்
* துணையமைச்சர்
* முழுயமைச்சர்

இப்படி பல்வேறு தலங்களில் பெறப்படுகின்ற மானியங்களை முறைப்படுத்துவதும் நேர்படுத்துவதும், பெறப்படுகின்ற தொகைகளின் அளவு, தேவையுள்ள செலவு, போன்றவற்றை கணக்கியில் நடைமுறையில் வைத்துக்கொள்ளுவதும் அதன் நிர்வாக நடைமுறைகளை முறைப்படுத்துதலும் ஓரளவு சிக்கலுக்குரியதே! அதனாலே, நாம் மேலே குறிப்பிட்டுள்ளப்படி ஆலயங்களின் அளவுகோல், ஒவ்வொரு ஆலயங்கின் விரிவாக்கத்தன்மை போன்றவற்றைக் கவனத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டுக்கும் முழுமைக்குமான செலவுகளை உத்தேசித்து வாரியமூலமாகக் கட்டாய அடிப்படையில் நிதி வழங்கப்படுமேயானால் அரசு மானியங்களை இதன் மூலம் ஒருங்கிணைக்க முடியும்! அதன் வழி மானியம்- நிதி ஒரு முக வழித்தேடல் மூலமே பெறவழியேற்படும்!

செயல்பாடும் முறைப்பாடும்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அரசு அமைக்கும் வாரியத்திற்கு அமைச்சர் தலைவராகவும் அவரின் அரசின் அதிகாரிகளும் திட்டமிடுவாளர்களும் அரசைச்சார்ந்தே இருக்கவேண்டும் நிதிவிவகாரங்களுக்கான திட்டமிடலையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும் இதன்வழி தகுதியான 10 பேரையாவது அரசு ஊழியர்களாக நியமித்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலிருந்து மதம்,சமூகம்,கலைப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட அல்லது உள்ளடக்கிய திறன்வாய்ந்த 20 பேரையாவது வாரியத்தில் இணைத்துக்கொள்ள  வேண்டும். இவர்கள் மூலம் சமூகத்தின் நிலைப்படுகளை துல்லிதமாக அறிதலும் புரிதலுமாகக் கண்டறிதல் வேண்டும் ஒவ்வொரு கொள்கைச்சார்ந்த முடிவுகளையும், அதனுடைய மேம்பாடுதலையும் முறைப்படுத்தலுமாக இக்குழுவின் நோக்கம் விருப்வெறுப்பற்ற கோணத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அதன்படி முடிவுகளை ஏற்று அமல்படுத்திட வேண்டும்!

அரசின் நிதி ஒதுக்கீட்டில் அமைச்சு வழியாகவும், அதன்பின்னர் வாரியத்தின் மேற்பார்வையிலுமாக பட்ஜெட்டில் ஆண்டுக்கு 500 மில்லியனை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இந்த நிதியை வாரியத்தின் பரிந்துரையின் படி, அமைச்சரின் ஒப்புதலோடு, அரசின் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளுமே நிர்வகிக்க வேண்டும். நிதி சம்பந்தமான விளக்கங்களை அளிக்கவும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். வெளியிலிருந்து நியமிக்கப்படும் வாரிய உறுப்பினர்களிடம் ஆலோசனைப்பெறவும் கருத்துபரிமாற்றம் செய்துக்கொள்ளவே பயன்படுத்த வேண்டும், அதேவேளை அமைச்சர் நினைத்தால் ஒருவரை நியமித்துக்கொள்ளவும், ஒருவரை அகற்றிக்கொள்ளவும் உரிமைப்பெற்றவராகயிருக்க வேண்டும்! இக்குழு குறைந்தது சராசரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடுவதாகயிருந்தாலும், அமைச்சர் விருப்பப்பட்டால் நாட்டின் சூழ்நிலைகளுக்கும், நடப்புப் பிரச்சனைகளின் அவசியம் குறித்தும் அவரசம் குறித்தும் வாரியத்தைக்கூட்டலாம்!

தொகுப்புரை!
&&&&&&&&&&

இக்கருத்தரங்கு வழி முறையான நெறியான சமய வெளிப்பாடும்
அதற்கேற்ப ஆலய அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும்
அரசாங்கத்தின் கவனிப்பும் ஆதரவும் ஒருங்கிணைப்பும்,நிதி ஆதாரங்களை ஒருமுகப்படுத்தலும் அதேவேளை நிர்வகித்தலும்,அடுத்தடுத்து சமயத்தை முன்னிறுத்தி எழும் சர்ச்சைகளும் அத்தகைச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தலுமாகும்.

அதேவேளை, இந்துமதம் இந்தியாவில் தோற்றியதால் இந்துமதமானதென்றும் அப்பெயர் ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது என்ற கருத்தியலுக்கு மத்தியில் சைவம், வைணம், சமனம்,புத்தம் என்கிறவகையிலும் இன்னும் ஏகப்பட்ட குருமார்களை வழிப்படுதலுமான நடைமுறைகள் இருப்பினும்,இத்தகைய வழிமுறைக்கெல்லாம் தலைமையாக பார்ப்பனர்களை முன்னணியாக உருவெடுத்திருப்பதாலும்,இன்னும் வழிப்பாட்டு மொழியாக சமஸ்கிருதமே கோலோச்சியிருப்பதாலும் திராவிடப்பெருங்குடி மக்கள் பெருமளவு ஆரியத்தின் பழக்க வழக்கங்களிலும் சிக்குண்டுத் தவிப்பதாலே, உண்மையிலேயே திராவிடர்களின் சமயத்துறையிலும் பண்பாட்டுத்தலங்களிலும் முரண்பட்டு இருக்கிறார்கள். என்பதாலும் நமது பார்வையை மற்றொரு வழித்தடத்தில் நகர்த்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்த இக்கருதரங்கு துணைப்புரிந்தால் நல்லது.
–டி.எம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.