சரவணபவன் உணவு கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

0
53
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ‘சரவணபவன்’ உரிமையாளர் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தெளிவான நோக்கத்துடன்  குற்றம் இழைத்துள்ளனர்.தனது உணவுக் கடையில் பணிபுரிந்த மேலாளரின் மகளான ஜீவஜோதியை 3-வதாக திருமணம் செய்து கொண்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கடத்தி கொலை செய்துள்ளார்.  கொலை மற்றும் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள 6 பேருக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏணைய 3 பேருக்கு 9 ஆண்டும், இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் உறுதி செய்தது.  ஜூலை 7 வரை அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வழங்கப்பட்டது.  இந்நிலையில்,உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபால் சரணடைய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  ராஜகோபாலன் சரணடைவதில் விலக்கு இல்லை என்றும் அவர் உடனே சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.