சரவண பவன் உரிமையாளரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

0
50

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி ‘சரவண பவன்’ உணவுகடை அதிபர் ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நேற்று மாலை, 3:50 மணியளவில், ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன், தனி ஆம்புலன்ஸ் வண்டியில்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, ‘ராஜகோபாலுக்கு ஒரு கண் பார்வை மட்டும் உள்ளது. உடல் ஒரு பக்கம் செயலிழந்துள்ளது. செயற்கை சுவாச கருவி உதவியுடன் சுவாசிக்கிறார். 20 நாட்களாக, படுத்த படுக்கையாக இருக்கிறார். ‘இதனால், நீதிமன்றத்தில் சரணடைவதில் சிக்கல் இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்து, அவர்களை சரணடைய அனுமதிக்க வேண்டும்’ என, ராஜகோபால் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும்,  நீதிபதி அவர்களை, புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.