சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0
140

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இன்சுலின் மருந்து வழங்க கோரியும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க கோரியும் சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

010 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலவச மிக்ஸி, கிரைண்டர், தாலி, சைக்கிள் போன்ற திட்டங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யும் அரசு, இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க வேண்டும். உத்தரபிரதேசம், டில்லி, மத்திய பிரதேச மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் தேவராஜன் மனுவில் கூறியிருந்தார்.

அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோயையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, நீதிபதி சரவணன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.