சர்வதேச விசாரணை தேவை குண்டுவெடிப்புக்கு பிறகு முஸ்லிம்கள் உரிமை பாதிப்பு

0
19

 

 ‘‘ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பிறகு முஸ்லிம்கள் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு நடவடிக்கை மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என சி.வி.விக்னேஸ்வரன்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 258 பேர் இறந்தனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும் முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பிக்கள் உள்ளனர். இதில் 19 பேர் முஸ்லிம்கள். இவர்களில் 9 பேர் கேபினட் மற்றும் இணை அமைச்சர் பொறுப்பு வகிக்கின்றனர். இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு பிறகு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒரு அங்கமாகவே முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால், விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அரசியல் அமைப்பு சட்டம் அவர்களுக்கு வழங்கிய உரிமையை மீறுவதுபோல் இது உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here