சவுதி இளவரசர் இம்ரான் கான் மீது கோபம்

0
9

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இம்ரான் கான் பாகிஸ்தான் புறப்பட இருந்தார். ஆனால், சவுதி அளித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இம்ரான் கானும், அவரது குழுவும் மீண்டும் தனியார் விமானத்தின் மூலம் பாகிஸ்தான் வந்தடைந்தனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் சவுதிக்கு இம்ரான் கானிடம் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக இம்ரானுக்கு வழங்கிய விமானத்தை அந்நாடு திரும்பப் பெற்றதாகவும் அமெரிக்க ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக டைம்ஸ் இதழ், “ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதியின் விருப்பத்துக்கு மாறாக துருக்கி அதிபர் எர்டோகன், மலேசியப் பிரதமர் மகாதிர் முகமத் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் ஈரான் அதிகாரிகளிடமும் பேசியிருக்கிறார். இதன் காரணமாக கோபம் கொண்ட சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இம்ரான் கானுக்கு அளித்த தனி விமானத்தைத் திரும்பப் பெற்றார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.