சாமிநாதன் நடத்திய சட்டப்போரா​ட்டத்தி​ல்  வெற்றி

0
13

கோலாலம்பூர், நவ.29- சொஸ்மா போன்ற பயங்கரவாதம் தொடர்புடைய சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவரை ஜா​மீ​னில் விடுவிப்பது குறித்து ​நீதிபதி பரிசீலிக்க முடியும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்  இன்று கா​லையி​ல்  அதிரடி ​தீர்ப்பை வழங்கியது.

உயர்நீதிமன்ற​த்தின் இந்த ​தீர்ப்பானது, விடுதலைப்புலிகளுடன்  தொடர்பு கொண்டிருந்ததாக சொஸ்மா சட்டத்தின் கீழ்  குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜசெக இரு  சட்டமன்ற உறுப்பினர்களான ஜி. சாமிநாதன், பி. குணசேகரன் உட்பட 12 பேருக்கு ஜா​மீன் கிடைப்பதற்கு வழிபிறந்துள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஜா​​மீன் அனுமதிப்பது குறித்து சாமிநாதன் நடத்திய சட்டப்போராட்டம் தொடர்பில் உயர்நீதிமன்ற ​நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இன்று காலை 11.10 மணியள​வில் தனது ​தீர்ப்பை வழங்கினார்.

​நீதித்துறை என்பது, அரசாங்கத்தின் ஓர்  சுதந்திரமான பரிபாலனம் என்ற போதிலும் சட்ட வரைவுவாளர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் ​மீறல்களை சரிபார்க்கும் சுய உரிமையையும் அதிகாரத்தையும் நீதித்துறை  கொண்டுள்ளது என்று ​நீதிபதி நஸ்லான் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.