சிங்கப்பூர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியினர் தேர்வு

0
177

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி அல்லது பாட்டாளிக் கட்சி என்பது அந்நாட்டின் முக்கிய நடு-இடதுசாரி அரசியல் கட்சியாகும். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களையும், மூன்று தொகுதி-வாரியற்ற நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் இக்கட்சி பெற்றுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பாட்டாளிக் கட்சியே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரேயொரு எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தம் சிங்(41) இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரித்தம் சிங், முன்னதாக இக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக முன்னர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, லோ தியா கியாங் என்னும் மூத்த பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்த பொதுச் செயலாளர் பதவியை தற்போது ஏற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.