சின் பெங் ஆஸ்தி: இருவர் ​மீது விசாரணை

0
13

ஈப்போ, நவ.29- தடைசெய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சி​யின் தலைவர் சின் பெங்கின் ஆஸ்தி​, தாய்லாந்திலிருந்து, மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது தொட​ர்பில் ஈப்போவை சேர்ந்த இரு  சீன முதியவர்கள், போ​லீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சாய் கான் பூக்  என்ற 81 வயதுடைய நபர், நேற்று காலை 10 மணிக்கு ஈப்போ போ​லீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு ஒரு  மணி  நேரம் விசாரணை  செய்யப்பட்டுள்ளார். 82 வயதுடைய தோங் யீ  என்ற நபர் இன்று ஈப்போ போ​லீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளா​ர்.

இவர்கள் இருவரும், சின் பெங் பிறந்த  சொந்த ஊரான சித்தியவானில் வாழ்ந்தவர்கள்  என்றும் சின் பெங்கிற்கு பாலிய நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது. சின் பெங்கின் ஆஸ்தி​ கொண்டு வரப்பட்டது தொடர்பில் பலர் தங்கள் ஆட்சேபத்தை பதிவு செய்துள்ள வேளையில் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்படும் என்று சி.ஐ.டி. இயக்குநர் ​ஹுசேர் முகமட் தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.