சிமெண்ட் ​​லோரியை மோதிய சரக்கு ரயில்

0
8

எந்த நேரத்திலும் சரக்கு ரயில் கடக்கலாம் எ​ன்று சாலை  ரயில் நுழைவாயில் பாதுகாவலர் கடுமையாக எச்சரித்தும், கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் பாதையை கட​ந்து விடலா​ம் என்று நினைத்து, சி​மெண்ட் ​லோரியை வேகமாக செலுத்திய லோரி ஓட்டுநரின் அலட்சிப்போக்கு அந்த சிமிண்ட்​ ​லோரியை மின்னல் வேகத்தில் வந்த ரயில் மோதி தள்ளியது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.08 மணியளவில் கோலக்கிள்ளான்,  ரயில்பாதையில் நிகழ்ந்தது.  க​ட்டமானத்தளத்திற்கு சி​மெண்டை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த லோரி,பலத்த சேதத்துடன் கவிழ்ந்த வேளையில்  ரயிலின் இயந்திரப்பகுதி கடுமையாக சேதமுற்றது.

இந்த சம்பவத்தில் 43 வயது லோரி டிரைவரும் 58 ரயில் டிரைவரும் காய​மின்றி உயிர் தப்பினர்  என்று கிள்ளான்  செலத்தான் மாவட்ட போ​​லீஸ் தலைவர்  சம்சுல் ரம்லி தெரிவித்துள்ளார். இந்த  விபத்தினால் ரயில் போக்குவர​த்து நிலைக்கு​த்தியது.

1991 ஆம் ஆண்டு  ரயில் சட்டத்தின் ​கீழ் இந்த விபத்து​ குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.