ராக்கா, – சிரியாவில் உள்ள கால்பந்து திடலில் கொத்து கொத்தாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் கோட்டையாக கருதப்பட்டு வரும் ரக்கா நகரில் தான் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
200க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் பெரும்பாலான சடலங்கள் சிரிய ராணுவ வீரர்களுடையது எனவும் தெரிய வந்துள்ளது. தீவிரவாத இயக்கத்தினரால் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் 500 சடலங்கள் அங்கு கண்டெடுக்கப் பட்டதாக ஷாமான் அல் வாசி என்னும் ஆன் லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்து தனித்தனி அடையாளங்கள் இன்னும் தெரியவில்லை, அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ரக்கா நகரில் அடிக்கடி தீவிரவாத இயக்கத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடக்கும். அப்படி நடந்த சண்டையில் ஆயிரக்கனக்கானோர் இதுவரை கொல்லப் பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. – பிரியா